அறிமுகம்
அருங்காட்சியகம் என்பது நாளாந்தம் பயன்படுத்திய அரிய அருகிய தொல் பொருட் சின்னங்களை தன்னகத்தே சேமித்து வைத்திருக்கும் கூடமாகும்.
அந்த வகையில் இலங்கையில் வடமாகாணத்திலே பிரதேச முக்கியத்துவத்தனையும் எடுத்துக்கூறும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நூதனசாலைகள் அமைந்துள்ளன. அதனடிப்படையில் இலங்கைத்தலைபோல் விளங்கும் வடபகுதியான யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நூதனசாலை தனிச்சிறப்பானதாகும்.
நாவலர் அருங்காட்சியகத்தின் தோற்றம்
1942ம் ஆண்டு தேசிய அருங்காட்சியகச் சட்டத்திற்கு அமைய கொழும்பு அருங்காட்சியகம் தேசிய அருங்காட்சியகமாக பிரகடனப்படுத்தப்பட்டது. சில ஆண்டுகளின் பின் 3 தேசிய அருங்காட்சியகங்கள் கண்டிஇ இரத்தினபுரிஇ யாழ்ப்பாணம் என்னும் இடங்களிலே ஸ்தாபிக்கப்பட்டது. 1956ம் ஆண்டு 2ம் குறுக்குத் தெருவில் அமைக்கப்பட்டது.
அருங்காட்சியகமானது ஆரம்பத்திலே ஆங்கிலேயர் பாணியில் அமைந்த தனியார் கூட்டம் ஒன்றிலே அமைக்கப்பட்டது. அது காலப்பகுதியில் பெரும்பாலான செயற்பாடுகள் கோட்டையை அண்டிய பிரதேசங்களிலேயே காணப்பட்டது. யாழ்ப்பாண பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் இவ் அருங்காட்சியகத்தை அலங்கரித்தன. அருங்காட்சியக பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்தமையால் பொருட்கள் காட்சிப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக நகரமயமாக்கம் போன்றவற்றாலும் அருங்காட்சியகத்திற்கு என சொந்தமாக கட்டிடம் அமைக்க வேண்டிய நோக்கம் ஏற்பட்டது. இதனை கருத்திற் கொண்டு 1972ம் ஆண்டு மார்கழி 18ம் திகதி கௌரவ எஸ் எஸ் குணதிலக அவர்களால் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 11 கூடங்களை கொண்ட கான்பு கட்டிடக்கலைப்பணியில் 1985ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இதன் அமைவிடமானது நாவலர் வீதியிலுள்ள இந்து கலாசார மண்டபத்திற்கு பின் புறமாக அமைந்துள்ளது.
http://www.wikiwand.com/ta/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88,_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
இவ் அருங்காட்சியகத்தில் 8கூடங்களிலே பொருட்கள் காணப்படுகின்றன. வரலாற்று உதயகாலம் தொடக்கம் ஆங்கிலேயர் காலம் வரையிலான பொருட்களும்இ மாதிரிப் பொருட்கள்இ திமிங்கலத்தின் எலும்பு போன்றன தொல் பொருட் சின்னங்களாக காணப்படுகின்றன யாழ்ப்பாண அருங்காட்சியகத்தின் கீழே வாய்ந்த இடங்களில் உள்ள கட்டிடங்கள் பாதுகாக்கப்பட்டடு வருகின்றன. கந்தரோடையில் உள்ள தூபிகள்இ சங்கானை கோட்டை கட்டடம்இ நெடுந்தீவிலுள்ள கோட்டை கட்டிடம் என்பனவாகும்.
நாவலர் அருங்காடசியகத்தின் குறை நிறைகள்
நாவலர் அருங்காட்சியகமானது யாழ்ப்பாணப் பண்பாட்டை வெளிப்படுத்துவதில் யாழ்ப்பாணத்தின் கலாசாரத்தையும் வெளிக்கொணர்வதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொல்லியல் அருங்காட்சியகமாகவும் வட இலங்கையின் பண்பாட்டை பிரதி பலிப்பதில் முதன்மையான அருங்காட்சியகமாக நாவலர் அருங்காட்சியகம் காணப்படுகின்றது.
இவ் அருங்காட்சியகத்தில் பல்வேறுபட்ட குறைகள் அடிப்படையில் காணப்படுகின்றன. அதாவது காட்சிப்படுத்தலின் அடிப்படையில் பல்வேறுபட்ட குறைகள் காணப்படுகின்றன. அதாவது தொல்லியல் சின்னங்களுக்கு உரிய வகையிலான காட்சிப்படுத்தல் கூடங்கள் அவற்றிற்கான டiபாவ வசதிகள்இ போதியளவு வெளிச்சம் போன்றன உரிய வகையில் அமைந்து காணப்படவில்லை.
அருங்காட்சியகத்திற்கு ஏற்றளவான இடவசதிகள் காணப்பட்டமை. இவற்றினால் உரிய முறையில் தொல் பொருள் சின்னங்களை காட்சிப்படுத்த முடியாமை. சுற்றுலாப் பயணிகள் உரிய முறையில் வசதியாக திரிய இடவசதிகள் காணப்படாமை.
சுற்றுலாப் பயணிகள் அருங்காட்சியகத்தினை பார்வைக்கு இட்டுச்செல்லும் போது யாழ்ப்பாணம் பற்றியதோ அல்லது அருங்காட்சியகம் பற்றியதான பொருட்களை விற்கக் கூடிய வசதிகள் இல்லாமை.
குடி நீர் வசதிகள் மற்றும் மலசலகூட வசதிகள் ஊழியர்கள் பற்றாக்குறை கணனி வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் குறைவான வகையில் இவ் நூதனசாலை காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தின் வரலாற்று கலாசார பெருமையை பறை சாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தலும் நாவலர் அருங்காட்சியகத்தில் பல்வேறு விதமான குறைபாடுகளை சுட்டிக் காட்ட முடியும்.
நாவலர் அருங்காட்சியகம் ஊடாக வெளிப்படும் யாழ்ப்பாணப் பண்பாடு.
யாழ்ப்பாண நாவலர் அருங்காட்சியகமானது யாழ்ப்பாணப் பண்பாட்டை பிரதிபலிப்பதிலும் பாதுகாப்பதிலும் அளப்பரிய பங்கினை நாவலர் அருங்காட்சியகமானது ஆற்றி வருகிறது. அந்த வகையிலே அங்கு காட்சிக்கு வைக்கப்படும் தொல்பொருட் சின்னங்கள் ஊடாக பண்பாட்டின் தொன்மையையும் சிறப்பையும் அடிப்படையில் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. அதாவது சமயம் சார்பான சின்னங்களும் மற்றும் பொருளாதார ரீதியான தொழில முறைகள் அதாவது விவசாயம்இ தங்கத் தொழில் மற்றும் கள்ளு சீவல் தயிர் கடைதல் போன்ற தொழில் இடம் பெற்றதற்கான சான்றுகளான உபகரணங்கள் காணப்படுகின்றன. மற்றும் போக்குவரத்து முறைக்கு மாட்டுவண்டி மற்றும் ஆரம்பத்தில் பயன்னடுத்திய சான்றுகள் ஆரம்ப கால மக்களின் பாவனைப்பொருட்கள் உரல்இ உலக்கைஇ விசிறிகள் போன்றனவும் மற்றும் கலையம்சம் பொருந்திய கலைப் பொருட்கள் விளையாட்டு முறைகள் என பல்வேறுபட்ட இன்னோரன்ன விடயங்கள் உள்ளடங்கிவுள்ளன பண்பாட்டு பெருமையை பறைசாற்றி நிற்பதனை அறிய முடிவும்.
எனவே ஒரு நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்கு தேவையான கடந்த கால வழிநடத்தும் பாங்கினை அருங்காட்சியகம் அளிக்கின்றது. அதுமட்டுமல்லாது முக்கியமானதாக கல்வி நிலையமாகவும் சேவையாற்றி வருகின்றது. மேலும் எமது பாரம்பரியத்தைவும் இயற்கை வளங்களையும் தேசிய வரலாற்றையும் எமது முன்னோரது வாழ்க்கை முறையினையும் எமது பண்பாட்டுச் சிறப்புக்களையும் அறிந்து கொள்ளவதற்கு பெரிதும் உதவுகின்றது.
ஊசாத்துணை நூல்கள்
1. பவுண்துரை.இஇ 2001இ “அருங்காட்சியகவியல்”இ பெய்யப்பன் தமிழ் தாயகம்
2. சில்வாஇ P. 1969 “இலங்கை கல்வி நூற்றாண்டு மலர்”இ பாகம் 3இஇலங்கை கல்வி கலாச்சார அமைச்சின் வெளியீடு
http://niroshitellippalai.blogspot.com/2014/12/navalar-musium-jaffna.html
No comments:
Post a Comment