Monday, June 19, 2017

சங்கானைத் தேவாலயம் அன்றும் இன்றும்



இலங்கையின் தொன்மையான வரலாற்றினைக் கொண்ட பிராந்தியங்களில் வட பகுதியும் ஒன்றாகும். அவற்றுள் யாழ்ப்பாணக் குடா நாடு முக்கியமான ஒன்றாகும்.

16ம் நூற்றாண்டு தொடக்கம் 20ம் நூற்றாண்டின் காலப்பகுதி வரை ஐரோப்பிய இனத்தவரின் ஆதிக்கத்தின் கீழ் தொடர்ச்சியாக இலங்கை இருந்தமை மட்டுமன்றி யாழ்ப்பாணமும் அதற்குள் அடங்கி ஐரோப்பியரது பண்பாட்டுச் செல்வாக்கிற்கு உட்பட்ட பிராந்தியமாக மாறிக் கொண்டது.

யாழ்ப்பாண வரலாற்றில் கி.பி 1658 – 1796 வரையான காலப்பகுதி முக்கியமானதாகும். இக் காலத்தில் தான் ஐரோப்பிய இனத்தவரில் ஒருவரான ஒல்லாந்தர் கைகளில் யாழ்ப்பாணம் உள்வாங்கப்பட்டது. இதன் வெளிப்பாட்டை ஒல்லாந்தர் கால எச்சங்கள் ஊடாக அறிந்து கொள்ள முடியும். ஓல்லாந்தர்கள் தமது புரட்டஸ்தாந்து மதம் பெற்ற செல்வாக்கினை; அவர்களால் அமைக்கப்பட்ட தேவாலயங்கள் ஊடாக அறியலாம்.
அவ்வாறு அமைக்கப்பட்ட ஆலயங்களில் சங்கானையில் அமைக்கப்பட் தேவாலயம் ஒல்லாந்தர் காலத்தில் அமைக்கப்பட்ட நிலையிலேயே பல அழிவுக்கு உள்ளாகி காணப்படுவதுடன் மரம் சம்மந்தமான எந்தவொரு ஆராதகைனளும் இடம் பெறாது கைவிடப்பட்ட ஒரு நிலையிலேயே காணப்படுகின்றது. இப்பிரதேச மக்கள் சங்கானைத் தேவாலயத்தினை ஒல்லாந்தர் கோட்டை எனவும் அழைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சங்கானைத் தேவாலயம் ஒரு வரலாற்று நோக்கு

யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமப் பிரதேசத்தில் சங்கானை என்ற இடத்திலேயே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சங்கானைத் தேவாலயம் அமைந்துள்ளது. சங்கானைத் தேவாலயம் ஆனது யாழ் நகரிலிருந்து மேற்குத்திசையில் கிட்டத்தட்ட 20மஅ துhரத்தில் அமைந்துள்ளது. யாழ்ப்பாண நகரிலிருந்து காரைநகர் செல்லும் பிரதான வீதியில் சங்கானைச் சந்தியிலிருந்து 450 – 400அ பிரதான வீதியில் இடப் பக்கத்தில் அமைந்துள்ளது.
ஒல்லாந்தர்கள் புரட்டஸ்தாந்து மதத்தினை பரப்புவதில் அதிகளவு ஆர்வம் கொண்டதன் விளைவாக யாழ்ப்பாணத்தில் ஓராளவான இடங்களில் தேவாலயங்களில் அமைத்தனர். தேவாலயங்களோடு இணைந்த வகையாலான கல்வி நடவடிக்கைகளையும் மேற்க்கொண்டனர். சங்கானையில் மட்டுமன்றி யாழ்ப்பாணத்தில் மொத்தமாக 18000 மாணவர்கள் கல்வி கற்றனர் எனவும் அவர்களுள் 12357 மாணவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள் எனவும் ஒல்லாந்த அரசின் அறிக்கைகளிலிருந்து அறிய முடிகிறது.
இன்று சங்கானையில் காணப்படும் தேவாலயமானது ஒல்லாந்தர் கால கலை மரபில் அமைக்கப்பட்டுள்ளது. 1658ம் ஆண்டு போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தர் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை கைப்பற்றிய பின்னர் அவர்களது வர்த்தகம்இ அரசியல்இ சமயக் கொள்கை காரணமாக யாழ்ப்பாணம் குறிப்பிடத்தக்க விளையுகளையும் மாற்றங்களையும் சந்தித்தன. இம் மாற்றங்களில் ஒன்றாக ஒல்லாந்தக்  கட்டடக்கலை மரபு இலங்கையில் வேரூன்றியது ஒல்லாந்தரை பொறுத்த வகையில் அவர்கள் கட்டடக்கலையில் சிறந்து விளங்குவதற்கு அவர்களுக்கிடையே தாய் நாடாகிய ஒல்லாந்தில் பெரும் பகுதி நிலம் சதுப்பு நிலமாகவும் கடலாகவும் இருந்தமைவும் அவற்றை பாரம் பரிய கட்டங்களை அமைப்பதில் அவர்கள் பெற்றுக் கொண்ட தேர்ச்சியுமே அவர்கள் கட்டடக்கலையில் குறிப்பாக கோட்டைக் கட்டடக் கலையில் விற்பனராக மிளிரக் காரணமாக அமைகிறது.


அந்த வகையில் அந்நியக் கலை மரபான ஒல்லாந்தக்கலை மரபினை பிரதிபலித்து நிற்கின்ற வகையிலும் பல நூற்றாண்டுகளை கடந்து ஒல்லாந்தரின் யாழ்ப்பாண ஆட்சியினையும் புரட்டஸ்தாந்து மதம் பெற்ற செல்வாக்கினை நிலைநிறுத்தும் முக்கிய பண்பாட்டுச் சின்னமாகவும் சங்கானை தேவாலயம் சிறப்பு பெறுகின்றது. போர்த்துக்கேயரால் சங்கானைத் தேவாலயம் முதலில் அமைக்கப்பட்டாலும் பின்னர் ஒல்லாந்தர் தமது மதத்திற்கு ஏற்ற வகையிலும் கலை மரபிற்கு ஏற்ற வகையிலும் மிரள வைத்துக் கொண்டனர்.
http://trips.lakdasun.org/tagged/chankanai-church
இத் தேவாலயம் முருங்கைக் கற்களினாலும் அமைக்கப்பட்ட மிகப் பிரமாண்டமான தேவாலயம் ஆகும். இதுவே மண்டபங்களைக்கொண்டு காணப்படுகின்றது. உள் மண்டபம் வெளிமண்டபம் அவையாகும். உள் மண்டபக்கூரை அமைப்பானது முருங்கைக் கற்களினால் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒல்லாந்தர் கால கலைத் தொழில் நுட்பம் சார்ந்தவை வெளிப்படுத்துகின்றது. உள் மண்டபத்தில் 2 யன்னல்கள் காணப்படுகின்றன வெளிமண்டபத்தில் 9 யன்னல்கள் காணப்படுகின்றன. யன்னல்கள் மற்றும் வாசல் அமைப்பானது பிறை போன்ற அமைப்பினை கொண்டு காணப்படுகின்றன. இவ்வாறு ஒல்லாந்தக்கட்டடக் கலை மரபினை பின்பற்றி சங்கானைத் தேவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

சங்கானைத் தேவாலயத்தின் தற்போதைய நிலை
கி.பி 1658ம் ஆண்டு இலங்கைக்கு வந்த அந்நிய இனத்தவரான ஒல்லாந்தரது ஆதிக்கத்தின் கீழ் அவர்களது மதமான புரட்டஸ்தாந்து மதம் பரம்பலுக்கு உட்பட்ட இடமாக சங்கானை காணப்பட்டதனை இன்றும் இழிவடைந்த நிலையில் காணப்படும் ஒல்லாந்தர் கால எச்சங்கள் பறை சாற்றுகின்றன. யாழ்ப்;;பாணத்;தில் போர்த்துக்கேயரால் அமைக்கப்பட்ட கத்தோலிக்க தேவாலயங்கள் பின்னர் ஒல்லாந்தர் ஆட்சியில் புரட்டஸ்தாந்து தேவாலயமாக மாற்றப்பட்டன.
ஒல்லாந்த கலை மரபில் கட்டப்பட்ட இத்தேவாலயமானது ஏறத்தாழ 350 வருடங்களுக்கு மேற்பட்ட நிலையில் ஒல்லாந்தரின் ஆட்சியின் விளைவினை இன்றும் பறைசாற்றும் முக்கிய பண்பாட்டு தொல்லியல் எச்சமாகக் காணப்படுகின்றது. இத் தேவாலயம் அமைந்துள்ள இடம் 5 பரப்பு காணியை கொண்டு உள்ளது. சங்கானைத் தேவாலயத்தின் இன்றைய நிலையில் அதன் மொத்த நீளமானது 4212உஅ ஆகவும் அகலம் 1211உஅ ஆகவும் காணப்படுகின்றது. உள்மண்டபம் வெளிமண்டபம் என்னம் இரு மண்டபங்களைக் கொண்டு காணப்படுகின்றது. இக் கூரை அமைப்பானது முருங்கைக் கற்களினாலே அமைக்கப்பட்டவையாகும். இத் தேவாலயத்தின் வெளிமண்டபமானது எவ்வித கூரையமைப்பும் இன்றி வெறுமையாக வெளியாகவே காணப்படுகின்றது. இதற்கு எத்தகைய கூரை அமைப்பு முறையை பின்பற்றி இருப்பார்கள் என்பதை ஊகிக்க முடியாத அளவிற்கு அதன் அமைப்பு காணப்படுகின்றது. யன்னல்களின் அமைப்பானது பிறை வடிவில் அமைந்து காணப்படுகின்றது. யன்னல்கள் அனைத்துமே அழிவடைந்த நிலையிலே காணப்படுகின்றது. இன்றுள்ள நிலையில் யன்னலோ கதவோ அற்ற நிலையில் காணப்படுகின்றது. அடுத்த தேவாலயத்தின் உள்மண்டபத்திற்கு செல்லும் நுழை வாயிலானது ஒல்லாந்தர் கால கலை மரபிற்கு ஏற்ப arch வடிவ வளைவைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. மற்றும் நில அமைப்பானது உள்மண்டபத்தினதும் வெளிமண்டபத்தினதும் நில அமைப்பானது மண்ணாகவே காணப்படுகின்றது. நில அமைப்பிற்கு எத்தகைய முறையை பயன்படுத்தினார்கள் என்பதை அகழ்வாய்வு  மூலமே கண்டறிய முடியும்.

https://www.facebook.com/sfds.chankanai/
சங்கானைத் தேவாலயமும் தொல்லியல் திணைக்களமும்
ஐரோப்பிய வரலாற்றிலே கி.பி 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே தொல்பொருட் சின்னங்கள் பற்றிய பார்வை புத்துயிர் பெற்றது. அவ் வகையில் இலங்கையில் கி.பி 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே தான் குறிப்பாக பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் தான் தொல் பொருட்கள்இ தொல் பொருட்சின்னங்கள் என்பவற்றின் முக்கியத்துவம் உணரப்பட்டது. இதன் விளைவாக தொல்லியல் திணைக்களம் கி.பி 1890ல் நிறுவப்பட்டது.
அந்த வகையில் சங்கானைத் தேவாலயத்தின் தொல்லியல் திணைக்களத்தின் பணியை நோக்க முடியும். சங்கானைத் தேவாலயமானது தொல்லியல் திணைக்களத்தினால் 2007.02.23 திகதி பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் பதிவு இலக்கம் 1986 ஆகும். சங்கானைத் தேவாலயமானது தொல்லியல் திணைக்களத்தினால் வடக்கில் அடையளம் காணப்பட்ட போதிலும் அதனை பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் மேற்க்கொள்ளப்படவில்லை. இத் தேவாலயத்தினை பலர் ஒல்லாந்தர் கால கோட்டை என்று குறிப்பிடுகின்றனர்.
இத் தேவாலயத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டு இங்கு ஆய்கவுள் மேற்கொண்டு அவ்வாய்வின் மூலம் அது எவ்வாறு காணப்பட்டது என்பதனை கண்டறிந்து அதனை மாற்றியமைத்து இலங்கையில் முக்கிய தொல்லியல் சின்னமாக மாற்றி அமைப்பதன் ஊடாக அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தி கொடுக்கும் வகையில் திட்டமிட்டு செயற்படுகின்றன. இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் குறைந்தளவு மூலதனத்துடன் அதிக இலாபம் ஈட்டும் சுற்றுலாவாக தொல்லியல் மரபுரிமை சுற்றுலா அமைகின்றது. இத் தேவாலயத்தினை பாதுகாப்பதன் ஊடாக அதனை ஓர் தொல்லியல் சுற்றுலா மையமாக மாற்றுவது முக்கிய அம்சமாகும்.

https://www.youtube.com/watch?v=W7w87cq0k54
உசாத்துணை நூல்கள்
1..   Philip boldaeus, 1996, “A Description of the great and most famous SLE of Ceylon”, asian educational services, page.no:- 802-805.


2.   Martin queen mi, 1995, “ Christanity in Srilanka under the Portuguese pad road”, Colombo catholic press, page no:- 1597-1658

2 comments:

இலங்கையில் உள்ள தொல்லியல் அருங்காட்சியகங்கள் ஒரு நோக்கு

      அருங்காட்சியகம் என்ற பதமானது அதாவது அரளநரஅ என்ற சொல் முதலில் 1981இல் oxford ஆங்கிலச் சொல்லகராதியில் இடம் பெற்றுள்ளது.அருங்காட்சிய...