Sunday, June 18, 2017

நெடுந்தீவின் கலாச்சார சுற்றுலா மையங்கள்


அறிமுகம்
        இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குத் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்றாகும். ஓல்லாந்தர்கள் இத் தீவை டெல்வ்ற் என்று பெயரிட்டு அழைத்தார்கள்.
இன்றும் ஆங்கிலத்தில் இத் தீவு இப்பெயராலேயே குறிப்பிடப்படுகிறது. நெடுந்தீவு தலைத்தீவுஇ பசுத்தீவு  பால்தீவு அபிசேகத்தீவு  தயிர்த்தீவு  முதலான பெயர்களால் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் அழைக்கப்பட்டு வந்துள்ளது. யாழ் குடா நாட்டில் இருந்து நெடுந் தொலைவில் இருப்பதனால் இத் தீவு  நெடுந்தீவு  என்று பெயர் பெற்றது என்பர்

        தொல்லியல் வரலாற்று பாரம்பரியம் கொண்ட இத் தீவு விவசாயம் கால்நடை கடல் வளங்களுடன் உள்ளது. 1813ம் ஆண்டு நெடுந்தீவுக் கடலில் இருந்து புறப்பட்ட ஹீர்த்தி டி போலோ எனும் ஐக்கிய அமெரிக்க இளைஞன் இத் தீவின் அழகையும் வளங்களையும் மனதில் கொண்டு இது தனி ஒரு நாட்டுக்கு சொந்தமானதல்ல இந்த பிரபஞ்சத்திற்கே சொந்தமானது என்கிறார். நெடுந்தீவின் வளங்கள் வரலாற்று பெறுமதி மிக்கவை.
        மற்றும் இப் புகழ் மிக்க நெடுந்தீவின் அமைவிடமும் பரப்பளவும் பற்றி பார்ப்போமானால் யாழ்ப்பாணத்திலிருந்து மற்றெல்லா தீவுகளிலிலும் கூடிய தொலைவில் அமைந்திருக்கும்தீவு இதுவே. யாழ்பாணத்திலிருந்து இதன் தூரம் 45மஅ ஆகும். புங்குடுதீவிலிருந்து 10மஅ தொலைவில் அமைந்துள்ளது. நெடுந்தீவு  வடக்கு தெற்காக 6மஅ அகலத்தையும் கிழக்கு மேற்காக 8மஅ நீளத்தையும் கொண்ட ஒரு சரிந்த இணைகர வடிவில் 30மஅ சுற்றளவையும் 48சதுரமஅ பரப்பளவையயும் கொண்டு இத் தீவானது அமைந்துள்ளது.
        அந்த வகையில் இச் சிறப்பு மிக்க நெடுந்தீவானது பல்வேறுபட்ட சிறப்பு மிக்க ஊர்களைக் கொண்டு அமைந்துள்ளது. ஆலங்கேணிஇ பெரியாண்துறைஇ மாவலந்துறைஇ பூமுனைஇ சாமித்தோட்ட முனைஇ குந்துவாடிஇ தீர்த்தங்கரை முதலிய பல்வேறுப்பட ஊர்களையும் பழைய பல இடங்களை கொண்டு நெடுந்தீவானது விளங்குகின்றது.
        அடுத்து இத் தீவானது சப்த தீவுகளிலே மிகச் சிறப்பான ஒன்றாக விளங்குகின்றது. அதாவது இலங்கையின் வட மாகணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குத் திசையில் அமைந்துள்ள 7 தீவுகளே ஆகும். “சப்த” என்னும் சொல் சமஸ்கிருத மொழியில் ஏழு என்னும் பொருளைக் கொண்டது. அத் 7 தீவுகளும் பின்வருமாறு.
லைடன் தீவு
புங்குடு தீவு
நைனா தீவு
காரை நகர்
நெடுந்தீவு
அனலதீவு
எழுவை தீவு  என்பனவாகும்.

        நெடுந்தீவின் புவியியல் தன்மை பற்றி பார்ப்போமானால் முதலாவதாக நெடுந்தீவின் பௌதிகத்தன்மை பற்றி நோக்குவோமானால் யாழ்ப்பாணத்தை போன்றே நெடுந்தீவிலும் மேற்கில் சுண்ணக்கற்பார் காணப்படுகின்றது. இரண்டு வகையான முருங்கைக்கற்கள் காணப்படுகின்றன. நீர் முருங்கைஇ மாமுருங்கை என்னும் பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

         நெடுந்தீவின் தரைத்தோற்றமானது தென் பகுதி உயரமான மேட்டு பிரதேசமாகவு ம் மத்திய பகுதி தாழ்ந்த பகுதியாகவு ம் காணப்படுகின்றது. மண்வளமானது பாறைத் தன்மைகளுக்கு ஏற்ப அமைந்துள்ளதை காணலாம். நெடுந்தீவின் மேற்கே சிறப்பான கருமையான இருவாட்டி மண் காணப்படுகின்றது. நன்நீரும் மண் வளமும் தோட்டப் பயிர்ச்செய்கைக்கு ஏற்றதாக உள்ளது. மற்றும் மண் தன்மையும் சுவாத்தியமும் பனை வளர்ச்சிக்கும் விருத்திக்கும் வாய்ப்பாக இருக்கின்றது.
மற்றும் நெடுந்தீவுப் பிரதேசத்தின் இயற்கை தாவர சிறப்புக்கள் பற்றிப் பார்ப்போமானால் இயற்கைத் தாவரங்கள் முக்கியமானது. பூவரசுஇ வேம்புஇ ஆல்இ அரசுஇ கித்திஇ புளிஇ நொச்சி போன்ற மரங்களும் பனையும் தென்னையும் அதிகமாக காணப்படுகின்றன. இங்க காணப்கடும் செடி கொடிகளாக பிரண்டைஇ குறிஞ்சாஇ காரைஇ ஆரைஇ தூதுவளைஇ காட்டுக்கருணை போன்றனவும் மருத்துவ மரங்களாக மாதுளைஇ எலுமிச்சைஇ வில்வைஇ விளாத்திஇ சண்புஇ புளிஇ வேம்புஇ வாகை முதலியன அதிகளவில் இங்கு காணப்படுகின்றன.

அந்த வகையில் நெடுந்தீவில் காணப்படும் பாரம்பரிய கலாச்சார மையங்கள் சுற்றுலாப் பயணிகளை கவருவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் இப் பாரம்பரிய மையங்கள் ஒவ்வொன்றின் சிறப்புகளையும் அவற்றின் முக்கியத்துவம் மற்றும் பெருமைகளை ஒவ்வொன்றாக ஆராய்ந்து பார்ப்போம்.

முகவுரை:-

அந்த வகையிலே நெடுந்தீவில் காணப்படும் பாரம்பரிய கலாச்சார மையங்கள் சுற்றுலாப் பயணிகளை
கவருவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. நெடுந்தீவில் மன்னர் ஆட்சிக்காலம் தொடக்கம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரையிலான சரித்திர பூர்வமான கோட்டைகளும் கட்டிடங்களும் சின்னங்களும் வியத்தகு விருட்சங்களும்இ சவாரி செய்வதற்கும்இ வந்தோரை வரவேற்கவும் முன்னிற்கும் குதிரைகளும்இ இயற்கையளிக்கும் காட்சிகளான சூரியோதய அஸ்தமனக் காட்சிகளும் சிறப்பானவையாகும். நெடுந்தீவின் கரலாசார சுற்றுலா மையங்கள் மிகவும் புகழ் பெற்ற பாரம்பரிய மையங்களாக விளங்குகின்றன.

நெடுந்தீவு கலாச்சார மையங்கள
வெடியரசன் கோட்டை
    யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த நெடுந்தீவு எனும் தீவில் அமைந்துள்ளது. யாழப்பாணக் குடா நாட்டின் கரைக்கு அப்பால் மேற்குத் திசையில் அமைந்துள்ள 13 தீவுகளில் மிகப் பெரியதும் ஆகும். நெடுந்தீவின் வடக்கு கரையோரத்தில் சிறிய கடற்கலங்கள் பயன்னடுத்தும் இறங்கு துறை ஒன்றுக்கு அருகில் இக் கோட்டை அமைந்துள்ளது. இக் கோட்டை முருங்கைக் கற்களினால் கட்டப்பட்டுள்ளது.
    இக் கோட்டை நெடுந்தீவை ஆட்சி
புரிந்த வெடியரசன் என்ற மன்னன் கோட்டைக் காடு என்னும் பகுதியில் அமைந்துள்ளது. இங்கிருந்தே வெடியரசன் என்ற மன்னன் ஆட்சி புரிந்தான் இக்கோட்டை சோழர் கால கட்டிட முறைப்படியிலே கட்டப்பட்டிருந்தது. இதன் வடிவமைப்பு பல சித்திர வேலைப்பாடுகளைக் கொ;டிருந்ததை அதன் சிதைந்த பகுதிகளைக் கொண்டு புதைப்பொருள் ஆராட்சியாளர்கள் கருதுகிறார்கள். இன்று இக் கோட்டை அழிந்த நிலையில் உள்ளது. இக்கோட்டையை அண்மித்த பகுதிகளில் மட்பாண்ட ஓடுகள்இ கூரை ஓடுகள்இ வட்டமான நாணயங்கள் சதுரமான நாணயங்கள் என்பனவும் கண்டெடுக்கப்பட்டுள்ன.
     இவ்வாறு மிகப் பழமை பொருந்திய இக் கோட்டை சுற்றுலாப் பயணிகளை கவரும் கலாச்சார சுற்றுலா மையங்களில் நெடுந்தீவில் காணப்படும் மிக முக்கியமான கலைப்படைப்பாகும்.

https://en.wikipedia.org/wiki/Neduntheevu
போர்த்துக்கேசர் கோட்டை
      போர்த்துக்கேசரும் நெடுந்தீவின் கேந்திர முக்கியத்துவத்தை உணர்ந்து நெடுநதீவின் மேற்கே பெரியதுறை என்னும் துறை முகத்திற்கு அண்மையில் ஒரு கோட்டையைக் கட்டி அங்கிருந்து ஆட்சி செய்தனர். இக் கோட்டை இடிந்த நிலையில் மண்மேடாக காணப்படுகிறது. இது ஒரு இரண்டு மாடிக் கட்டடமாக கட்டப்பட்டிருந்தது.
        இதன் சுவர்கள் மிகவும் அகலமாக இருந்தன மேலே இரண்டு அறைகளும் இருந்தன. இவற்றுக்குக் கீழே ஒரு சுரங்க அறையிருந்தது. மேலறைக்குச் செல்லக்கூடியதாக இரட்டைச் சுவர்ப்படி கட்டப்பட்டிருந்தது. அதற்கு வெளிப்புறமாக நாலு அடி சதுர யன்னல் அமைக்கப்பட்டிருந்தது. இதன் கூரை தடடையாக இருந்தது எனவும் கூறியுள்ளார்.

குவிந்தா கோபுரம் (வெளிச்ச வீடு)
        நெடுந்தீவின் தென் கிழக்கே காணப்படும் முக்கோண வடிவில் கட்டப்பட்ட வெளிச்ச விட்டுக் கோபுரமாகும். உயரமானது 23 அடி அல்லது 5அ ஆகும். இதனை ஒல்லாந்தர்களே கட்டினார்கள் இவர்களால் கட்டப்பட்ட இக் கோபுரத்திற்கு இராணியின் கோபுரம் எனப் பெயரிட்டார்கள். இதுவே நாளடைவில் குவிந்தா என அழைக்கப்பட்டது. நெடுந்தீவை நோக்கி வரும் பெரிய கப்பல்கள் திசைமாறிச் செல்லாதிருக்க இது ஒரு திசை காட்டி கோபுரமாக விளங்கியது. குவின்ரவர் என்ற பெயரைக் கொண்டு இதனைப் பிரித்தானியர்களே கட்டினர் என கருதிய போதிலும் இக் கோபுரத்தை ஒல்லாந்தர் காலத்திலேயே கட்டப்பட்டதென மூதாதையர்களின் கர்ணபரம்பரைக் கதைகளாலும் அக் கோபுரத்தின் கட்டிட அமைப்புஇ காலம் என்பவற்றைக் கொண்டும் அதனைக் கட்டியவர்கள் ஒல்லாந்தரே என அறியப்பட்டடுள்ளது. இக் கோபுரத்தின் தொழில்நுட்ப முறை வியக்கத்தக்கதாகும் மூன்று உறுளைத் துhண்களை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து கட்டப்பட்டது போல் அமைவு  பெற்று அதன் மேல் கூம்பு வடிவமான ஓர் முடிம் காணப்படுகிறது. மேலும் ஒவ்வொரு வகையான வெளிச்ச வீடுகளும் கப்பல் திசை மாறாது செல்வதற்கு ஒவ்வொரு வகையான ஒளிச் சமிக்ஞைகளைக் கொண்டு உள்ளது. அது இரவில் தொடர்ந்து ஒளியை விசிறியை வண்ணமட அமைவு பெற்று விளங்குகின்றது. இன்று இக்கோபுரம் இழிந்த நிலையில் உள்ளதைக் காணலாம். அந்த வகையில் நெடுந்தீவின் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இவ் வெளிச்ச வீடு காணப்படுகிறது.

பகிர் ( கற்களைக் கொண்டு அடுக்கப்பட்ட வேலி)
       நெடுந்தீவின் விசேடங்களில் ஒன்று. தீவை அழகு படுத்தும் கற்களால் கட்டப்பட்டு அரண் செய்யயும் பகிர் என அழைக்கப்படும் கல் வேலிகளாகும். இவற்றை இலங்கையில் வேறெங்கும் தொடராக காணமுடியாது. அவ்வளவு தனிச் சிறப்பு பெற்ற ஓர் கல்வேலி அமைப்பு நெடுந்தீவின் தனிச்சிறப்பினையே எடுத்துக் காட்டுகின்றது. நெடுந்தீவிலுள்ள சகல கமக் காணிகளும்இ வீட்டுக் காணிகளும் கற்களால் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு கட்டப்பட்டு அருப்பதைக் காணலாம். சிறிய கற்களை அத்திவாரமாக அடுக்கி அவற்றின் மேல் பெரிய கற்களை அளவிற்கேற்ப முதலில் அடுக்கி பின்னர் சிறிய கற்களை மேல் நோக்கி ஒன்றன் மேல் ஒன்றாக படிப்படியாக அடுக்குவார்கள். இவை ஆடு மாடுகள் வெளியலிருந்து வராமல் பாதுகாப்பளிக்கின்றன. சிலர் இவற்றுக்கு மேலாக பனை ஓலைகளை வைத்து அடைந்துமிருப்பர். இவற்றுக்கு வாசலில் கதவுகள் போட்டிருப்பார்கள். கமக் காணிகளுக்கு இரண்டு பனந்துண்டங்களைக் கொண்டு பெரும்பாலும் அமைத்திருப்பார்கள். இதனால் இவற்றைக் கொட்டுப்பனையென அழைப்பர்.
         இவ் பனம் கொட்டுக்களை ஆட்கள் மட்டும் நுழைய கூடிய வாறு ஆங்கில எழுத்து வி வடிவில் வழியமைத்திருப்பார்கள். இவ்வாறு சுற்றுலா விருத்திக்கு நெடுந்தீவின் கலாச்சார மையங்களின் கல்வேலி அமைப்பு சிறப்பானதாகும்.

கட்டைக் குதிரைகள்
         நெடுந்தீவு  கட்டைக் குதிரைகளுக்கு பேர் பெற்ற ஓர் இடமாகும். இவை தன்னிச்சையாக நெடுந்தீவு  வெளிகளில் மேய்ந்து திரிகின்றன. இங்குள்ள குதிரைகளும் கோவேறு கழுதைகளும் 1660ம் ஆண்டு முதல் 1675ம் ஆண்டு வரை வட பகுதியின் ஒல்லாந்த ஆளுனரான ரிஜிக் கொஸ்வேன் கொஹென்ஸ் இந்த தீவில் தங்கியிருந்த போது இந்த மிருகங்களை கப்பல்கள் மூலம் இத் தீவுக்கு கொண்டு வந்து இறங்கியிருக்கிறார். 19ம் நூற்றாண்டில் அவை நோலான் என்ற பிரித்தானியரால் முறையாக வளர்க்கப்பட்டன. இத் தீவில் இருந்து இக் குதிரைகளை கொண்டு செல்ல முடியாது என்ற சட்டம் நெடுந்தீவில் வழக்கில் இருந்தது.
         இக் குதிரைகள் யாவும் உயர் இனத்தை சார்ந்தவையாகும். இவற்றுக்காக ஒல்லாந்தர்கள் பல கிணறுகளையும் கேணிகளையும் கட்டி இருந்தார்கள். அத்துடன் பல குதிரை கட்டும் லாயங்களையும் அமைத்திருந்தார்கள் இவையின்றும் சிதைந்த நிலையில் நெடுந்தீவின் மேற்கே காணப்படுகின்றன. இக் குதிரைகள் ஒல்லாந்தர் நாட்டை விட்டுப் போனதும் போதிய பராமரிப்பு இன்மையும் அவற்றை தேடுவாரின்மையும் அவை சுயேச்சையாக தீவின் தெற்கே உள்ள புல்வெளிகளில் சுதந்திரமாக திரிவதைக் காணலாம். இவை இன்றும் காட்டுக் குதிரைகளாக மாறி விட்டன. இவற்றின் வாரிசுகள் வெல்லையென அழைக்கப்படுகின்றன. புல்வெளிப் பிரதேசத்தில் கூட்டம் கூட்டமாகத் திரியும் காட்சி பார்ப்போர் கண்களுக்கு நல்ல விருந்தாகும் இன்று இவற்றின் தொகை குறைத்து கொண்டே செல்கின்றன. இக் குதிரைகள் நெடுந்தீவின் சுற்றுலா வளர்ச்சிக்கு முக்கிய ஓர் அம்சமாக விளங்குகிறது.

மாவிலித்துறைமுகம்
        மாவிலித்துறைமுகத்திற்கு மாவிலி என்ற பெயர் வந்ததற்குப் பல கதைகள் கூறப்படுகின்றன. மாவிலி என்ற பெயர் வரக் காரணம் தென் இந்திய அரசன் மாவல்லவன் இத் தீவை ஆண்டதாகவும் அதனால் மாவல்லபுர மக்கள் இத் துறைமுகத்தை மாவிலி என அழைத்ததாகவும் ஒரு கர்ண பரம்பரைக் கதையுண்டு இதற்கான சரித்திரச் சான்றுகளில்லை ஒல்லாந்தர் நெடுந்தீவை ஆட்சி செய்த காலத்தில் இத் துறைமுகம் மூலமாகவே குதிரைகளை இறக்கி ஏற்றினார்கள். மா என்ற  சொல்லுக்கு குதிரை பெரிய என்ற அர்த்தங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆகவே குதிரைகளை ஏற்றி இறக்கியதால் மாவிலி என்ற பெயர் உண்டாயிற்று என்பதே உண்மையான காரணமாகும்.
          இத்துறைமுகமே இன்று நெடுந்தீவு  மக்கள் ஏனைய தீவுகளுக்கும் யாழ்படபாணக் குடா நாட்டிற்கும்கடல் மூலம்; பழரயாணஞ் செய்யப் பயன்படும் பிரதான துறைமுகமாகவும் விளங்குகின்றது.இது ஏறக்குறைய 300அடி நீளமும் 75அடி அகலமும் கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றது. பிரயாணிகள் இறங்கவும் பொருட்களை இறக்கவும் கொங்கிறீற்றினால் கட்டப்பட்ட துறை ஒன்று உள்ளது. இது கடலினுள் 15அடி நீளமும் 10அடி அகலமுமாக கட்டப்பட்டடுள்ளது. முற்காலத்தில் பத்தைகள் மூலமும் வள்ளங்கள் மூலமும் பிரயாணம் செய்த மக்கள் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தின் பிற்பகுதி தொடக்கம் இன்று வரை இயந்திரப்படகுகள் மூலமும் இயந்திரம் இணைக்கப்பட்ட வள்ளங்கள் மூலமும் குறுகிய நேரத்திலும் வசதியாகவும் இத்துறைமுகத்திலிருந்து பிரயாணம் செய்கிறார்கள். இதற்காக சில்வஸ்பிறேஇ குமுதினிஇ வடதாரகைஇ எலாரா போன்ற இயந்திரப்படகுகள் சேவையில் ஈடுபட்டன. இவ்வாறு பாரம்பரியம் தொடக்கம் இந்த மாவிலித்துறைமுகம் சிறப்புப் பெற்று தற்காலத்திலும் பல்வேறு துறைகளில் இத் துறைமுகம் சிறப்புப் பெற்று சுற்றுலா பயணிகளை கவரும் துறைமுகமாகும்
     
பெருக்கு மரம்
        இம் மரம் நெடுந்தீவின் கிழக்குப் பகுதியில் காணப்படுகிறது. இது பாவோபாப் மரம் என அழைக்கப்படுகிறது. இம் மரம் பல நூறு வருடங்கள் மேற்பட்டதெனக் கூறப்படுகின்றது. இம் மரத்தில் உள்ள துளை வழியே உள்ளே சென்றால் அங்கே குகை போன்ற அமைப்பு உள்ளது. இங்கே உரு குடும்பம் நிற்கக் கூடிய இட வசதி உள்ளது. கிழக்கு ஆபிரிக்காவைச் சேர்ந்த இம் மரத்தை அரேபிய வியாபாரிகள் 7ம் நூற்றாண்டளவில் இங்கு கொண்டு வந்ததாக கூறப்படுகின்றது.
         இதன் அடி மரம் மிகவும் விசாலமானது. இதன் பூக்கள் வெண்மை நிறமாகவும் காய்கள் வட்டமான பச்சை நிறமாகவும் உள்ளன. இத்தகைய மரங்கள் இலங்கையிலே மிகச் சிலவே உள்ளன எனக் கூறப்படுகிறது. இவை இன்று பெரும்பாலும் கால நிலை மாற்றங்களாhல் அழிந்து கொண்டு செல்கின்றன எனக் கூறப்படுகின்றது. இவ்வாறு இப் பெருக்கு மரம்  நெடுந்தீவில் மிகவும் பழமையான அரிய மரமாக காணப்படுகிறது.

பழமை வாய்ந்த ஆலமரம்
        நெடுந்தீவின் கிழக்கே பிள்ளையார் கோவிலின் அருகே நூற்றாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஒரு ஆலமரம் பெரிய விருட்சமாக அரை மைல் விஸ்திணத்திற்குக் கிளைகளைப் பரப்பி படர்ந்து காணப்படுகின்றது. இதன் இலைகளை ஆடு மாடுகள் உண்பதில்லை இதன் அருகே ஒரு பிளடளையார் கோவில் உள்ளது. இவ்வாலயம் இந்த ஆலமரத்தின் அருகே இரு
ப்பதால் ஆலமாவனப் பிள்ளையார் ஆலயமென அழைக்கப்படுகிறது.

அரசணைய அரசு
       நெடுந்தீவின் மேற்கில் உள்ள புக்காட்டு வைரவர் கோவிலின் அருகே பல நூறு வருடங்கள் பழமை வாய்ந்த பெரிய அரசமரம் ஒன்றுள்ளது. இதன் மூன்று ஏக்கர் நிலம் வரை வியாபித்துள்ளது கிளைகள் நிண்டு வளைந்து நிலத்தில் பொறுத்து பின் மேலோங்கி வளருகின்றது மகாவித்தியாலத்தின் ஐந்தாண்டு நிறைவு பலரில் இணுவிலைச் சேர்ந்த முன்னாள் அதிபர் திரு.ஆனந்தா.டி.ஒ.எஸ் அவர்கள் இதனை பார்த்து அரசனையடி அரசு என்ற தலைப்பில் கட்டுரை எழுதிவுள்ளார். இந்த வகையில் இங்குள்ள பெரிய மரங்கள் மிகவும் வழமையானது. சுற்றுலா பயணிகளை கவரும் மரங்களாக விளங்குகின்றன.

அஞ்சல் கோபுரம் புறாக்களின்
       நெடுந்தீவுப் பகுதியில் இன்றும் துஃ3 பிரிவில் இவ் அஞ்சல் கோபுரம் காணப்படுகின்றது. காலணித்துவ காலத்தில் அஞ்சல் தொடர்பாடல்களை மேற்கொள்வதற்காக ஒல்லாந்தர்களால் கட்டப்பட்டதே இவ் புறாக்களின் கோபுரம்.
        இன்றும் நெடுந்தீவுப் பகுதியில் அழிவடைந்த நிலையில் புறாக்களின் கோபுரம் அமைந்துள்ளது. இது மிகவும் பழமையான பாரம்பரியமான கோபுரமாகும் இது சுற்றுலாப் பயணிகளை கவரும் ஓர் கோபுர அமைப்பாகும்.

இராட்சதக் காலடி ஃ ஆதாமின் காலடி ஃ சிவனின் காலடி
        நெடுந்தீவுப் பிரதேசத்தில் காணப்படும் ஓர் தொன்மையான மையமாக கூறப்படுவது 40 அடி மனிதனின் பாதச்சுவட்டினை ஒத்த பாதச் சுவட்டைக் காணலாம். இது நெடுந்தீவின் மேற்கில் சாறாப்பிட்டி கோளாங்கற் பாறைகளின் மத்தியில் காணப்படுகிறது. இது சாதாரண மனிதர்களின் பாதங்களை விட மிகவும் பெரியதாக காணப்படுகின்றது. அத்துடன் இப் பாதத்தை இராம பிரானின் கால் பாதமெனவும் ஜதிகங்கள் கூறுகின்றன. இது சுற்றுலாப் பயணிகளை கவரும் ஓர் மையமாகும்.

வளரும் அம்மன் கல்
      நெடுந்தீவு  பிரிவில் இவ் வளரும் அம்மன் கல் இன்றும் காணப்படுகின்றது. இக் கல் மிகவும் பழமையான சிறப்பான கல் ஆக விளங்குகின்றது.
      பழமையானதும் தொன்மையானதுமான இக் கல் நெடுந்தீவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் ஓர் மையமாகும். இக் கல் அம்மன் சிலையைப்போல் தானாகவே வளர்ந்து காணப்படுகின்றது. சுற்றுலாவின் வளர்ச்சிக்கு இக் கல்லும் அரிய அம்சமாக நெடுந்தீவில் விளங்குகின்றது.
பூதம் வெட்டிய கிணறு.
https://www.youtube.com/watch?v=V_CXGUn79FU





உசாத்துணை (முக்கியம்)

1. சிவநாயகமூர்த்தி.சுஇ 2003இ “நெடுந்தீவு மக்களும் வரலாறும்”இ விவேகா அச்சகம்
2. குகபாலன்.காஇ 1994இ “திவக வளமும் வாழ்வூம்”இ திவகக் தோட்ட கூடடுறவு  ஒன்றியம்.
3. புஷ்பா மருதுஇ 2014இ “நானும் என் தாய் மண்ணும்”இ மெகா டிஜிற்றல்இ யாழ்ப்பாணம்.



No comments:

Post a Comment

இலங்கையில் உள்ள தொல்லியல் அருங்காட்சியகங்கள் ஒரு நோக்கு

      அருங்காட்சியகம் என்ற பதமானது அதாவது அரளநரஅ என்ற சொல் முதலில் 1981இல் oxford ஆங்கிலச் சொல்லகராதியில் இடம் பெற்றுள்ளது.அருங்காட்சிய...