Sunday, June 18, 2017

ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தொல்லியல் மையங்கள்


     வரலாற்று புகழ் மிக்க காவலூர் என சிறப்பாக அழைக்கப்படுகின்ற பகுதியாக தொண்டு தொட்டு இன்று வரை வரலாற்று புகழ் மிக்க ஒரு பகுதியாக இப் பிரதேசம் விளங்குகின்றது.

இலங்கையின் வட மாகாணத்தில் வட மாகாணத்தில் பண்டைய சிறப்பு மிக்க துறைமுகமாக விளங்கியது ஊர் காவற்துறை ஆகும். லைடன் தீவு  என ஒல்லாந்தரால் அழைக்கப்பட்ட இத் தீவின் வட மேற்கில் ஊர்காவற்துறை அமைந்துள்ளது. லைடன் தீவு  எனவும் அழைக்கப்படுகின்றது. நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் வரலாற்றுக் குறிப்பு ஒன்று இதை தணதீவு  என குறிப்பிடுகின்றது.
      கிறிஸ்துவு க்கு முன் 6ம் நூற்றாண்டில் இருந்து ஊர்காவற்துறை துறை முகமாக இருந்தது என சரித்திர ஆய்வாரள்கள் கூறுகின்றார்கள். புராக்கிரமபாகு மன்னன் காலத்தில் இது துறைமுகமாக இருந்தது என வரலாற்றுச் சான்று பகருகின்றது. போர்த்துக்கேயர் இலங்கைக்கு வருவதற்கு முன் தென்னிலங்கை அரசனான 6ம் பராக்கிரமபாகு யாழ்ப்பாண அரசை வெற்றி கொண்டு ஊர்காவற்துறை துறைமுகத்தில் ஆதிக்கம் செலுத்தியதாக கூறப்படுகிறது. கால கதியில் அது ஒரு துறைமுகமாக உருவெடுத்தது.

        அறுபதுகளுக்குப் பின் சப்த தீவூ மக்களும் சங்கமாகும் இடம் காவலூராகவே இருந்தது. 1960ம் ஆண்டு வரை நெடுந்தீவூ உட்பட அனைத்து தீவூ மக்களும் ஊர்காவற்துறை துறைமுகம் வந்து தான் காரை நகர் ஊடாக யாழ்ப்பாணம் சென்றனர். ஊர்காவற்துறை அரசினர் வைத்தியசாலை மருத்துவ பணிக்கு நடு நிலைமையாய் இருந்தது. பொலிஸ் நிலையம்இ நீதி மன்றம் அதாவது நிதித் துறை சார்ந்த சகல குற்றவியல் விசாரணைகள் வழக்குகள் அனைத்தும் காவலூரில் இடம் பெற்றமையால் நீதி மன்றம் கூடும் நாட்களில் தீவூப் பகுதி மக்கள் இங்கு கூடுவது வழக்கம் 1950 ஆண்டு வரை காவலூர் சுங்கப் பகுதி கொழும்புக்கு அடுத்து இணை;டாம் இடத்தினைப் பெற்றது.
https://www.youtube.com/watch?v=n0tcKo0Mvgc
         முதலாவதாக ஊர்காவற்துறை கடற்கோட்டை (உறமன்கில் கோட்டை) இக் கோட்டையானது JOO49 ஊர்காவற்துறை கிராமசேவகர் பிரிவிற்கு உட்பட்டு அமைந்து காணப்படுகின்றது. இக்கோட்டை தொடர்பான வரலாற்று அம்சங்களை ஆராயும் போது காரைநகருக்கும் ஊர்காவற்துறைக்கும் இடையில் காணப்படும் சிறிய மணற்திடலின் மேல் போர்த்துக்கேய தளபதியான அமிடஸ் மென்சிஸ் என்பவரால் 1658ம் ஆண்டு சிறிய அளவில் உருவாக்கப்பட்டது. ஒல்லாந்தர் வட இலங்கையின் பாதுகாப்பிற்கும் இப் பிரதேசம் மிகவு ம் முக்கியமானது என்பதை உணர்ந்து சிறந்த தொழில் நுட்ப திறனுடன் பன்றியின் கால் போன்ற வடிவில் கோட்டை உருவாக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே ஒல்லாந்தர் மொழியில் Hயஅஅயn hடைட என்ற பெயரினால் அழைக்கப்படுகிறது. முருங்கைக் கல்லினால் கட்டப்பட்டு மேற்புறத்தில் கூரை வேயப்பட்டு பச்சை தாவரங்களுடன் காணப்படுவது மிகவும் வனப்பு மிக்கதாக காணப்படுகின்றது.
           ஓல்லாந்த கட்டடக்கலை தனித்துவத்தை வெளிப்படுத்தும் முக்கிய சான்றாதாரமாக  இவ் மையம் அமைந்துள்ளது. பிரித்தானியர்களாலும் தமது முக்கிய தளமாக பாவிக்கப்பட்டு சுதந்திரத்தின் பின்னர் முக்கிய சிறைச்சாலை ஆகவு ம் ராசை மையமாகவும் காணப்பட்டு இன்று சுற்றுலா விடுதியாக மாற்றமடைந்து உள்ளமையைக் காணலாம். பூதத்தம்பிக் கோட்டை என்றும் இது அழைக்கப்பட்டு வந்தது.

ஊர்காவற்துறை கடற்கோட்டை
      இக் கடற்கோட்டை இன்றும் கடலுக்குள் கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றது. இது பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அரசினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இவ் கோட்டையானது பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக கலாசார தேசிய மரபுரிமைகள் அமைச்சினால் 2006.11.17 மற்றும் 2007.02.23 திகதியில் அரச வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. படகு மூலம் இவ் கோட்டைக்குச் செல்ல முடியும் ஊர்காவற்துறையிலிருந்து மைல் தொலைவில் உள்ளது சிறப்பான ஒன்றாகும்.

உருண்டிக் கோட்டை
     ஆதிக் குடியேற்றப் பகுதியான உருண்டி துறைமுகத்தை மையமாகக் கொண்டு போர்த்துக்கேயரால் இது கட்டப்பட்டது. துஃ50 பருத்தியடைப்பு கிராம சேவகர் பிரிவினை உள்ளடக்கியதாகும். இப் பகுதி செம்மண் கலந்த புமியாகவும் மக்கள் செறிந்து காணப்பட்டமையாலும் இக் கோட்டையினை அமைத்தனர். இது பழங்கோட்டை என்ற பெயரில் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. நயினாதீவில் கி.பி1620ற்கும் இடைப்பட்ட காலத்தில் நயனாதீவில் கட்டப்பட்ட நாகம்மை ஆலயத்தினை இடித்து அதன் கற்களை கொண்டு ஊர்காவற்துறை சங்குமால் அருகில் இக் கோட்டை கட்டப்பட்டது. 1950களில் கோட்டையில் கோவில் கூரை நல்ல நிலையில் இருந்தது. இங்கு பிரபுக்கள் வாழும் மனை அல்லது காசில் எனக் குறிப்பிடுவது 05 மஅ தூரத்தில் உள்ளது. இக் கோட்டைப்பகுதியில் யாழ் திருமறைக் கலா மன்றத்தினர் திருப்பாடுகளின் காட்சியை ஒளிப்படமாக்கியது சிறப்பான விடயமாகும். இப் பிரதேசம் கல்வாலி மலையை ஒத்திருந்தமை இப் புனித நிகழ்வை காட்சிப்புலமாக்க உதவியது.

ஊர்காவற்துறை துறைமுகம்

     ஊர்காவற்துறை துறைமுகமானது இயற்கை துறைமுகமாக அமைந்து காணப்படுகின்றது. துஃ49 ஊர்காவற்துறை கிராம சேவகர் பிரிவிற்கு உட்பட்டுக் காணப்பட்டது. இலங்கைத் தீவிலும் யாழ்ப்பாண இராச்சியத்தினதும் வட நீர்ப்பரப்பை பாதுகாக்கும் பொறுப்பினை இத் துறைமுகம் பெற்றுள்ளது. யாழ்ப்பாண அரசர் காலத்தில் மட்டுமல்ல போர்த்துக்கேசர் ஒல்லாந்தர் பிரித்தானியர் ஆட்சிக் காலங்களில் வர்த்தகத்திலும் கடற்பாதுகாப்பு நடவடிக்கைகளில் பெரும் பங்களிப்பு செய்திருந்தது. இத் துறைமுகம் பரப்பளவிலும் சிறியதாக இருப்பினும் இயற்கை துறைமுகத்திற்குரிய பண்புகள் பலவற்றைக் கொண்டுள்ளது. ஆழமான கடற்பரப்பைக் கொண்ட இத் துறைமுகம் சிறிய கப்பல்களில் போக்குவரத்துக்கும் அவை தங்கி இங்கு நிற்பதற்கும் ஏற்றதாகவும் உள்ளது. போர்த்துக்கேசரால் இத் துறைமுகத்திற்கு குழசவயடநணய என பெயரிடப்பட்டுள்ளது. இது உள்ளக ரீதியான பகுதியைக் கொண்டுள்ளது. இதில் உள்ள மதில்கள் யாவும் உயரம் 41.2அடி  உயரமானது இத்துறைமுகமானது 1688ம் ஆண்டு காலப்பகுதியில் இடம் பெற்ற யாழ்ப்பாணத்தின் மீதான முற்றுகைக்காலத்தில் டச்சுக்காரரின் ஆடசியின் கீழ் கொண்டு வரப்பட்டது. ஊர்காவற்துறையில் நகரம் 100அ தொலைவில் அமைந்துள்ளது. இத் துறைமுகத்திலிருந்து தற்போது காரைநகருக்கு கடற்பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகின்றமை சிறப்பானதாகும்.

புளியந்தீவு நாகேஸ்வரன் ஆலயம்
         இவ் ஆலயம் துஃ38 அனலைதீவு கிராம சேவகர் பிரிவிற்குள் அமைந்து காணப்படுகின்றது. நயினாதீவு நாகேஸ்வரி ஆலய வரலாற்றில் காணப்படும் சம்பவங்கள் இவ்விரு ஆலயங்களுக்கும் இடையேயான தொடர்புகளை எடுத்துக் காட்டுகின்றன. இவ் ஆலயமானது தென் இந்திய இராமேஸ்வர ஆலய பூசாரியான ஸ்ரீ தாமோதர ஐயர் ஆதி பூசகராக கடமையாற்றினார். இவராலேயே இவ் ஆலயம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இவ் ஆலயச் கூழலில் பல்வேற வகை மருந்து மூலிகை மரங்கள் காணப்படுவதோடு மட்டுமல்லாமல் ஆலயத்தின் தல விருட்சமாக அரச மரம் காணப்படுகின்றது. ஆதியில் சிதம்பரத்தை தரிசிக்க வியாக்கியபாரதர் நாம் மேற்கொண்ட திர்த்த யாத்திரையின் போது இங்கு வந்த லிங்கத்தை வழிபட்ட தலம் புவியேந்தி என அழைக்கப்பட்டு பின்னர் புளியந்தீவானது இங்கு திர்த்த வாவியொன்று மேற்கு கடற்கரையோரத்தில் உள்ளது. இவ்வாலயம் புளியந்தீவு  பிரதேசம் உள்ளடக்கிய ஊர்காவற்துறையின் வரலாற்றுத் தொன்மைக்கு சிறப்பளிக்கின்றது.
        இவ்வாலயமானது துஃ38 அனலைதீவு  கிராம சேவகர் பிரிவிற்குள் உட்பட்டு காணப்படுகின்றது. யாழ்ப்பாண தீபகற்பகத்தின் தென்மேற்கு திசையிலுள்ள தீவு க் கட்டடங்களில் ஒன்றான அனலதீவில் அருள் சுரக்கும் ஐயனார் ஆலயம் பிரமாண்டமான கட்டிடங்களை கொண்டு அமைப்பில் பெரியதாகவு ம் வரலாற்று பெருமை உடையதாகவு ம் அமையப் பெற்றுள்ளது. அனலைதீவின் நயினா குளம் என்னும் இடத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இங்குள்ள ஐயனாரின் திருவுருவம் முன்னொரு காலத்தில் இத் தீவின் மேற்கு சமுத்திரத்தின் தரையில் ஒரு பெட்டியில் அடைக்கப்பட்டு வந்ததும் இன்றைக்கு 350 வருடங்ளுக்கு முந்தைய காலத்தில் கண்டவர்கள் கடலின் கரைக்கு கொண்டு வரும் போது பாரம் தாங்க முடியாமல் பூமியில் வைத்தனர். அவ்வாறு வைத்த இடமே நயினாகுளம் எனும் சிறப்பம்சமாகும். ஆலயத்தின் மேற்குப் பகுதியில் கமிபமாக உள்ள சமுத்திரத்தின் சங்கம் தீர்த்தம் அமைந்துள்ளது. இது சேது சமுத்திர திர்த்தம் கலக்கும் சிறப்புடையது. திவின் வாயிற் பகுதியில் இவ்வாலயம் அமைந்துள்ளது. அதனால் திவின் காவல் தெய்வமாக விளங்குகின்றது. இந்து சமய அலுவலகத்தில் பதியப்பட்டுள்ளது. 30.12.1988ம் ஆண்டு ஊர்காவற்துறை நகரில் இருந்து 13மஅ தொலைவில் உள்ளமை சிறப்பான ஓர் ஆலயமாகும்.

புனித யாகப்பர் ஆலயம்
     இவ் தேவாலயம் ஆனது துஃ49 ஊர்காவற்துறை கிரமா சேவகர் பிரிவிற்குள் உட்பட்டு  காணப்படுகின்றது. ஊர்காவற்துறையில் அமைந்துள்ள தேவாலயங்களுள் மிகவும் பழமையானதாகும். இலங்கையில் ஸ்பானிய நாட்டுக்குருக்கள் தொண்டாற்றிய இடங்களில் தம் நாட்டின் பாதுகாவலரான புனித யாகப்பரின் பெயரால் ஆலயங்களை எழுப்பினர் எனத் தெரிய வந்துள்ளது. இவ் வலயத்துக்கான சபுக்கள் 1815ம் ஆண்டு தை மாதம் 1ம் திகதி கோவைக் குருவாரான வண.டல்காடோ என்ற தியான சம்பிரதாய சபை குருவாரால் சபுக்கல் நாட்டப்பட்டது. இன்று இவ்வாலயம் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் அழகிய தோற்றத்தில் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டு பக்தர்களால் திருவிழா வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.
      இவ்வாலயம் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக கலாசார தேசிய மரபுரிமைகள் அமைச்சினால் ஒல்லாந்தர் பள்ளி என 2006.11.17 மற்றும் 2007.02.23 திகதி அரச வர்த்தமானியில் பிரகடனப்பத்தப்பட்டுள்ளது. ஆடிமாதம் 25ம் திகதி திருவிழா இடம் பெறும் ஊர்காவற்துறை நகரில் இருந்து 100மஅ தொலைவில் உள்ள சிறப்பான தேவாலயமாகும்

சின்னமடு மாதா யாத்திரைத்தலம்
       இவ்வாலயம் ஆனது துஃ60 புளியங்கூடல் கிரமா சேவகர் பிரிவிற்குள் உட்பட்டு  காணப்படுகின்றது. போர்த்துக்கேசர் காலத்தில் இவ்வாலயம் அமைக்கப்பட்டுள்ளது. இது யாழ்ப்பாண நகருக்கு எதிர்ப்புறம் உள்ள தணத்தீவு  மிலேச்ச அரசனால் 2ம் ஆண்டு புதுமை மாதா குழுக்கு கொடுக்கப்பட்டது. இக் கொடைபற்றிய செம்பேடு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் பாதுகாக்கப்படுகின்றது. யாழ் மாவட்டத்தின் யாத்திரை கட்டளைச் சட்டத்தின் கீழ் யாத்திரைத் தலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆடிமாதம் 27ம் திகதி இருந்து ஆவணி மாதம் 05ம் திகதி வரை திறவிழாக்காலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இன்றும் இவ்வாலயம் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்படுகின்றது. ஊர்காவற்துறை நகரிலிருந்து 05மஅ தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளமை சிறப்பான ஒன்றாகும்.

புனித அந்தோனியார் ஆலயம்.
        ஊர்காவற்துறை கிரமா சேவகர் பிரிவில் இவ்வாலயம் அமைந்து காணப்படுகின்றது. 1820ம் ஆண்டு போர்த்துக்கேயரால் கட்டப்பட்டது. காவலூரில் ஏற்ப்பட்ட வாந்திபேதி நோயினின்று மக்களை காப்பாற்றியமை இவ்வாலயத்திற்கு கிடைத்த மகிமையாகும். இது பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அரசினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.





புனித பேதுரு பவுல் ஆலயம்
      நாரந்தனை கிரமா சேவகர் பிரிவிற்கு உட்பட்டுக் காணப்படுகின்றது. இது 1909ம் ஆண்டு கட்டப்பட்டது. இவ்வாலயத்தில் கத்தோலிக்க திருட்சபையில் முதல் வேத சாட்சிகளாக விளங்கியவர்களின் பெயரில் இவ்வாலயம் அமையப் பெற்றுள்ளமை

பேரிந்து மரம்
         நாரந்தனை கிரமா சேவகர் பிரிவிற்கு உட்பட்டுக் காணப்படுகின்றது. இம் மரத்தில் ஏறுவது முஸ்லீம் சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும். தற்போது இம் மரம் பூக்களுடன் காணப்படுகின்றமை சிறப்பான ஒரு விடயமாகும். பழமையான இம் மரம் ஊர்காவற்துறை பிரதேசத்திற்கு அழகு சேர்க்கும் ஓர் விடயமாக காணப்படுகிறது.

புறாக்கூடு
         
       துஃ53 பருத்தியடைப்பு கிரமா சேவகர் பிரிவிற்கு உட்பட்டுக் காணப்படுகின்றது. நெடுந்தீவில் காணப்படுகின்றது. நெடுந்தீவில் காணப்படும் புறாக் கூட்டினை ஒத்ததாக ஊர்காவற்துறை பகுதியில் காணப்படுகிறது. அதாவது வெளிநாட்டடில் இருந்து வரும் புறாக்களை தங்க வைப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். பாழடைந்த நிலையில் இன்றும் காணப்படுகின்றது.

சுமைதாங்கிக்கல்
       பருத்தியடைப்பு கிரமா சேவகர் பிரிவிற்கு உட்பட்டுக் காணப்படுகின்றது. இது பயணிகள் தாங்கள் கொண்டு வரும் சுமைகளை இறக்கி இளைப்பாறிச் செல்வதற்கு வசதியாக அமையப் பெற்றுள்ளது. அதாவது ஒரு பெண் சுமையோடு கர்ப்பவதி ஆகி இறந்தால் அவளது நினைவாக இக் கல் அமையப் பெற்றது என்ற மரபு காணப்படுகின்றது. அந்த வகையிலே இன்றும் இக் கல் அப் பகுதியில் காணப்படுகின்றது.

வெளிச்ச வீடு
       அனலைதீவு கிரமா சேவகர் பிரிவிற்கு உட்பட்டுக் காணப்படுகின்றது. மதியக்கட்டை என்ற பெயரினால் இவ் வெளிச்ச வீடு அழைக்கப்படுகின்றது. அனலைதீவு  வடக்கில்; கடற்போக்குவரத்துக்கு பாதுகாப்பாக அமைந்துள்ளமை சிறப்பானதாகும்.

அன்ரன் விலா
       துஃ49 ஊர்காவற்துறை கிரமா சேவகர் பிரிவிற்கு உட்பட்டுக் காணப்படுகின்றது. இது பாதுகாக்கப்பட்ட நினைவு ச் சின்னமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஆவு ரஞ்சிக் கல்
      ஆவு ரஞ்சிக் கல்லானது இன்னும் நாரந்தனை அனலைதீவு தெற்கு பகுதியில் அமைந்து காணப்படுகின்றது. கால் நடைகள் தங்களின் உணவினை சமிபாடடைய செய்வதற்காக இக் கல்லினை பயன்படுத்துவதுண்டு. நீர் பருகும் குளக்கரைப் பகுதிகளில் அது அமைந்து காணப்படுகின்றது. திருவிiயாடல்இ திருப்புகழ் ஆதாரங்கள் காணப்படுகின்றன. இதே ஒத்த ஆவுரஞ்சிக் கல் உடுப்பிட்டி பகுதிகளிலும் காணப்படுகின்றது.

சமாதி
     
  துஃ49 ஊர்காவற்துறை கிரமா சேவகர் பிரிவிற்கு உட்பட்டுக் காணப்படுகின்றது. போர்த்துக்கேயரால் பயன்படுத்தப்பட்ட இடமாக சமாதி காணப்படுகின்றது. சிறப்பான ஓர் விடயமாகும்.
       அந்த வகையிலே பார்க்கும் இடத்து ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட 16 தொல்லியல் மையங்கள் அடையாளப்படுத்தப்பட்டு சுவர்களினால் சிறப்பான முறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றமை காணலாம். எனினும் இவ் தொல்லியல் மையங்களை அடையாளப்படுத்தி எவ்வாறு சுற்றுலா சார் ரீதியாக வளப்படுத்த முடியும்.

No comments:

Post a Comment

இலங்கையில் உள்ள தொல்லியல் அருங்காட்சியகங்கள் ஒரு நோக்கு

      அருங்காட்சியகம் என்ற பதமானது அதாவது அரளநரஅ என்ற சொல் முதலில் 1981இல் oxford ஆங்கிலச் சொல்லகராதியில் இடம் பெற்றுள்ளது.அருங்காட்சிய...