Monday, June 26, 2017

இலங்கையில் உள்ள தொல்லியல் அருங்காட்சியகங்கள் ஒரு நோக்கு


 
    அருங்காட்சியகம் என்ற பதமானது அதாவது அரளநரஅ என்ற சொல் முதலில் 1981இல் oxford ஆங்கிலச் சொல்லகராதியில் இடம் பெற்றுள்ளது.அருங்காட்சியில் என்பது கண்காட்சி கூடம், நூதனசாலை, கலைக்கூடம், காட்சிச்சாலை, அகழ் வைப்பகம் என பொருள் கொள்ளப்பட்டது.

   
அருங்காட்சியகம் என்பது நாளாந்தம் பயன்படுத்திய அரிய அருகிய தொல்பொருட் சின்னங்களை தன்னகத்தே சேமித்து வைத்திருக்கும் கூடமாகும். இவ் இடத்தை பொது மக்கள் அதிகளவு பார்வையிட வருவதால் அருங்காட்சியகம் எனப்பட்டது. அந்த வகையில் நோக்கங்கள் தேவைகளை அடிப்படையாக கொண்டு அருங்காட்சியகங்கள் பல வகைப்பட்டன. அவற்றுள் தொல்லியல் அருங்காட்சியகம் சிறப்பானவையாகும்.
     இலங்கையில் அருங்காட்சியகங்கள் தோன்றி வளரப் பல காரணங்கள் பின்னணியாக உள்ளன. இலங்கையில் அருங்காட்சியகங்கள் தோன்றி வளர பிரித்தானியர் ஆட்சியில் எதிர்பாரமல் கிடைத்த தொல்பொருட் சின்னங்கள் காரணமாகும். 1818ம் ஆண்டு பிரித்தானியத் தரைப் படை அதிகாரியான லெப்பு.எம்.எச்.பாகன் அவர்கள் கிளர்ச்சிக்காரர்களை பிடிப்பதற்காக பொலனறுவை மாவட்டத்தில் தேடுதல் நடத்தினார்கள் அப்போது பண்டை நினைவுச் சின்னங்களின் சில முக்கிய பகுதிகளைக் கண்டதும் அவர்கள் அவற்றைப் பற்றி அறிவதில் ஆர்வம் காட்டினார்கள். இதனைத் தொடர்ந்தே அருங்காட்சியகங்களின் தேவை இலங்கையில் உணரபட்பட்டது.
      அந்த வகையிலே இலங்கையிலே அதிகளவான அருங்காட்சியகமாக தொல்லியல் அருங்காட்சியகம் காணப்பட்டது. தொல்லியல் அருங்காட்சியகம் தொல்லியல் ஆய்வுகள் மூலம் கிடைக்கும் அரும்பொருட்களை காட்சிக்கு வைக்கின்றனர். தொல்லியல் அருங்காட்சியகங்கள் பல திறந்த வெளி அருங்காட்சியகங்களில் உள்ளன. தொல்லியல் ஆய்வு களங்களில் எடுக்கப்பட்ட பொருட்களை சேகரித்து பாதுகாப்பான முறையில் கட்டிடங்களில் காட்சிக்கு வைக்கின்றனர்.
 

நாவலர் தொல்லியல் அருங்காட்சியகம்.

       வட இலங்டயைகின் தொன்மையான அருங்காட்சியகங்களில் ஒன்றாக நாவலர் அருங்காட்சியகம் காணப்படுகிறது. தேசிய அருங்காட்சியகத்தின் கீழ் 3 இடங்களில் அதாவது கண்டி, இரத்தினபுரி, யாழப்பாணம் என்னும் இடங்களில் அமைக்கப்பட்டது. அந்த வகையில் 1956ம் ஆண்டு 2ம் குறுக்குத் தெருவில் அமைக்கப்பட்டது. பின்பு அங்கு ஏராளமான தொல்பொருட்கள் கிடைத்தமையால் காட்சிப்படுத்தலில் உள்ள குறைபாடுகள் காரணமாக 1972ம் மார்கழி 8ம் திகதி கௌரவ எஸ்.குணதிலக அவர்களால் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு 11 கூடாரங்கள் கொண்டு கட்டிட கலைப்பாணியில் அமைக்கப்பட்டது.
       இங்கு பல்வேறுபட்ட பொருட்கள் வரலாற்று உதய காலம் தொட்டு ஆங்கிலேயர் காலம் வரையிலான தொல்பொருட் சின்னங்கள் காட்சிக்கு வைக்கப்பட்ட சிறப்பான தொல்லியல் அருங்காட்சியகம் ஆகும்.

அநுராதபுர அருங்காட்சியகம்

       இவ் அருங்காட்சியகம் பிரதேச மாளிகைக்கும் ருவான்வெலிசாயாவுக்கும் இடையில் உள்ள அநுராதபுர பழைய கச்சேரிக் கட்டிடத்தில் அமைந்துள்ளது. இவ் அருங்காட்சியகம் 1947ம் ஆண்டு சேனரத் ........ முயற்சியால் அமைக்கப்பட்டது. கலாச்சார முக்கோணம்.  பகுதியில் உள்ள மிகப் பழைய அருங்காட்சியகங்களுள் ஒன்றாகும். இங்கு புத்தர் சிலைகள், அணிகலன்கள், மணிகள் போன்ற பல பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
     
வவுனியா தொல்பொருள் காட்சிச்சாலை

இலங்கை வடமாகாணத்தின் தெற்கு எல்லையை அண்டி அமைந்துள்ள வவுனியா நகரில் உள்ள அருங்காட்சியகம் ஆகும். இது தொல்n பொருள்  திணைக்களத்தினால் நிறுவப்பட்டது. இங்குள்ள பொருட்கள் 5 முதல் 8ம் நூற்றாண்டு காலப் பகுதியை சேர்ந்தவை. இவற்றுள் அப்பிரதேசங்களில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலைகள், கிறிஸ்தவ மதம் சார் தொல் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

காலி தேசிய அருங்காட்சியகம்

         இலங்கையில் உள்ள காலிக் கோட்டையில் அமைந்துள்ளது. இது இலங்கையில் தென் மாகாணத்தை சார்ந்த வரலாற்றுடன் தொடர்புபட்ட பல அரும்பொருட்களை கொண்டுள்ளது. 1986 மார்ச்மாதம் 31ம் திகதி நிறுவப்பட்டது. இதனை இலங்கை அரசின் நூதனசாலைகள் திணைக்களம் நிர்வகிக்கின்றது.
         இங்கு புராதன மட்பாண்ட துண்டுகள், களிமண் உருவங்கள், முக மூடிகள் மற்றும் ஓடுகளால் செய்யப்பட்ட பொருட்கள், உலோகப் பொருட்கள், பழமையான நகைகள், ஒல்லாந்தர் கால உபகரணங்கள் மற்றும் பொளத்தம்n சார் பொருட்களும் சிறப்பாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன


கொழும்பு தேசிய அருங்காட்சியகம்
https://www.youtube.com/watch?v=ipCRf-Ejymw
         இலங்கையின் மிகப் பெரிய அருங்காட்சியகம் கொழும்பு தேசிய அருங்காட்சியகம் ஆகும். இலங்கை அரசின் நூதனசாலைகள் திணைக்களம் இதனை நிர்வகிக்கின்றது. 1877.01.01 இல் அருங்காட்சியகம் அமைத்து முடிக்கப்பட்டது. இவ் அருங்காட்சியகம் இத்தாலியக் கட்டிடக்கலையை பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கண்டி ராச்சியத்தின் இறுதி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் முடியும் பிரித்தானிய அரசிடம் இருந்து மிகப் பெற்று வைத்தும் பேணப்படுகிறது.
எனவே இலங்கையில் பல்வேறுபட்ட தொல்லியல் அருங்காட்சியகங்கள் பல காணப்பட்டுள்ளதும் அவற்றில் குறிப்பிட்ட சில தொல்லியல் அருங்காட்சியகங்கள் சிறப்பானவையாகும்.

உசாத்துணைகள்
பவுண்துரை. கி, 2001, 'அருங்காட்சியகம்', மெய்யப்பன் தமிழ் நாயகம்
பஸ்தியாம்பிள்ளை, பீ, 1997, 'கொழும்பு நூதனசாலை நூற்றாண்டு நினைவு மலர்', கொழும்பு நூதனசாலை வெளியீடு.

No comments:

Post a Comment

இலங்கையில் உள்ள தொல்லியல் அருங்காட்சியகங்கள் ஒரு நோக்கு

      அருங்காட்சியகம் என்ற பதமானது அதாவது அரளநரஅ என்ற சொல் முதலில் 1981இல் oxford ஆங்கிலச் சொல்லகராதியில் இடம் பெற்றுள்ளது.அருங்காட்சிய...